அட்டை வேலுடன் கோவிலில் டி.ஆர் பஞ்ச் அட்டகாசம்..! முகத்தை திருப்பிய குழந்தை

0 19007
அட்டை வேலுடன் கோவிலில் டி.ஆர் பஞ்ச் அட்டகாசம்..! முகத்தை திருப்பிய குழந்தை

திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அட்டையால் செய்யப்பட்ட வேல் உடன் சாமிகும்பிடச்சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் அடுக்குமொழியில் பஞ்ச் வசனங்கள் பேசி பக்தர்களை பரவசப்படுத்தினார்.

தமிழ் திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் அடுக்குமொழி அட்டகாசத்திற்கு பெயர் பெற்றவர் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்..!

தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி என்ற பெயரில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர், தேர்தலில் வெற்றிபெற வேண்டி தனது அணியின் வேட்பாளர்களுடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றார்.

அட்டையால் செய்யப்பட்ட வேல் ஒன்றை கையோடு எடுத்துச்சென்றிருந்த டி.ஆர் அதனை கையில் பிடித்தவாறு முருகப்பெருமகனை போற்றி அரோகரா கோஷம் எழுப்பினார்.

தொடர்ந்து சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த டி.ஆர் அங்கு வந்த பெண் ஒருவரின் கைக்குழந்தையை ஆசையாக தூக்க முயற்சிக்க, அந்த குழந்தையோ, டி.ஆரை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டது. மனம் தளராத டி.ஆர் அந்த குழந்தையின் கையில் வேல் கொடுத்து தன் பக்கம் இழுத்தார்.

தொடர்ந்து தனது அணியின் வெற்றிக்காக முருகனிடம் வேண்டியதை அடுக்குமொழியில் பஞ்சிற்கு மேல் பஞ்சாக பேசி பக்தர்களை பரவசப்படுத்தினார்..!

பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்பளிப்பாக ஆளுக்கு 10 ரூபாயை அள்ளிக் கொடுத்து விட்டுச் சென்றார் டி.ராஜேந்தர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments