பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்ற தாயிடம் காவல்துறையினரும், சைல்டு லைன் அமைப்பினரும் விசாரணை நடத்தினர்.
பூங்காநகரை சேர்ந்த ஹாஜி முகமது - ஆமினா பேகம் தம்பதியினர் தங்களது குழந்தையை விற்பனை செய்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் சைல்ட் லைன் அமைப்புக்கு புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் குழந்தையின் தாயான ஆமினா பேகத்திடம் நடத்திய விசாரணையில், 4வதாக பிறந்த பெண் குழந்தையை, குடும்ப வறுமையின் காரணமாக விராலிமலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற இடைத்தரகர் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு குழந்தையில்லாத தம்பதியினருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்க காவல்துறையினருடன் இணைந்து சைல்ட் லைன் அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments