இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம்... போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

0 5509

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்கும் என்றும், லண்டன் லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல், மான்செஸ்டர் ஆகிய இடங்களில் எஞ்சிய டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய மண்ணில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments