பயணிகளின் வருகை குறைவையொட்டி சென்னை - கோவை இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்து

0 2501
பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை -சென்னை, சென்னை- கோவை ஆகிய 2 சதாப்தி சிறப்பு ரெயில்களில் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு ரெயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் கோவை-சென்னை வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற தினங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments