தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2894
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மதுரை,தேனி, சிவகங்கை, விருதுநகர்,ராமநாதபுரம், திருநெல்வேலி,தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments