பீகார் கல்வி அமைச்சர் பதவி ஏற்ற 3 நாட்களில் ஊழல் புகாரில் ராஜினாமா

0 2844

பீகாரில் பதவியேற்ற 3 நாட்களில் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்திரி ஊழல் புகாரில் ராஜினாமா செய்துள்ளார்.

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக அவர் பதவி வகித்த போது, பதவி நியமனங்களில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், மீண்டும் இணைந்து அண்மையில் அமைச்சராகவும் பதவியேற்றார்.

இதற்காக முதலமைச்சர் நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கடுமையாக விமர்சித்தது.  இதனிடையே தேசிய கீதத்தின் பாடல் வரிகளை மெஹ்வால் சவுத்திரி தவறாக உச்சரித்ததாக வீடியோ வெளியாகியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments