திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடைபெற உள்ளது - தமிழக அரசு தகவல்

0 2922
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சூரசம்ஹாரத்தை நடத்தக் கோரிய மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சூரசம்ஹாரத்தை கடற்கரையிலேயே நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்வும், விதயஹர்தாவின் அறுவுறுத்தலின் படி 108 மகாதேவர் சன்னதியில் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பங்கேற்பின்றி, சூரசம்ஹாரம் நிகழ்வை நடத்த வேண்டும் என்றும், அனைத்து தொலைக்காட்சிகளும் நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments