பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளுக்கு விசிட்டர் விசா கிடையாது - ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளுக்கு விசிட்டர் விசா வழங்குவதை, ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
ஹாங்காங்கில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்த பாகிஸ்தான் பயணிகள் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தாக்கக்கூடும் என்ற காணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானைப் போல், துருக்கி, ஈரான், ஏமன், சிரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் விசிட்டர் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் ரத்து செய்துள்ளது.
UAE suspends visit visas for Pakistan, 11 other countries: Full listhttps://t.co/Xovp0tRGSZ pic.twitter.com/YaWUwVYbpY
— Mint (@livemint) November 19, 2020
Comments