இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 2 - ஆவது வாரத்தில் மீண்டும் துவக்க, லைக்கா நிறுவனம் திட்டம்

0 7606

ந்தியன் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை, டிசம்பர் 2 - ஆவது வாரத்தில் மீண்டும் துவக்க, லைக்கா நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்கள்.

சென்னை - பூந்தமல்லி திரைப்பட நகரத்தில் கமல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, கிரேன் அறுந்து விழுந்து, 3 பேர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக
படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவியது. தற்போது நிலைமை மாறி உள்ளதால், டிசம்பர் 2 - வது வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments