ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் 39 பொதுமக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆஸ்திரேலியா சிறப்பு படையினரால் பொதுமக்கள், கைதிகள் என 39 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதற்கு நம்பகமான சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
2001-ல் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க படைகளுடன் இணைந்து போராட 26,000-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர்.
அப்போது, ஆஸ்திரேலிய சிறப்பு படையினரால் 39 பேர் கொல்லப்பட்டதை உறுதிபடுத்த நம்பகமான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தவறுக்காக ஆப்கான் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் விசாரணை அதிகாரி ஆங்கஸ் காம்ப்பெல் கூறியுள்ளார்.
Comments