கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு என எழுந்துள்ள புகாரை, அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது, 6ஆம் வகுப்பிலிருந்து, ஒரு வகுப்பிலும் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு விதி உருவாக்கி அறிவித்துள்ளதாக நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் முறையிடப்பட்டது.
தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு, வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முறையிட்ட மனுதாரர், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Comments