பாரத் நெட் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

0 1291
பாரத் நெட் திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 544 கிராமங்களிலும் அதிவேக இணையவசதி அளிப்பதற்கான பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டு 1,871 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கருவிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

எனினும், ஒப்பந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அதனை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் கோர அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து பாரத் நெட் திட்டத்திற்கான தொகையை 2222 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், 1815 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகை மாநில அரசால் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments