கிறிஸ்துமஸ்க்கு முன்னதாக கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கி விடும் என பயான்டெக் நம்பிக்கை
பைசர்-பயான்டெக் கொரோனா தடுப்பூசி விநியோகம் கிறிஸ்துமசுக்கு முன்னதாக தொடங்கி விடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி, 3வது கட்ட சோதனையில், தீவிரமான பக்க விளைவுகள் ஏதுமின்றி 95 சதவீதம் பலனை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவசர கால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை அடிப்படையிலும் டிசம்பரின் பிற்பாதியில் அங்கீகாரம் வழங்கக் கூடும் என்றும், திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடியாக நடைபெற்றால் கிறிஸ்துமசுக்கு முன்னதாக விநியோகம் தொடங்க வாய்ப்பு உள்ளது.
BioNTech Chief Executive Ugur Sahin said if all goes well, the U.S. and Europe could grant emergency authorization for their COVID-19 vaccine by Christmas https://t.co/NvzqTrwpyD pic.twitter.com/53xp3ncQ3Z
— Reuters (@Reuters) November 19, 2020
Comments