என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரில் SDPI அலுவலகங்கள் உள்பட 43 இடங்களில் சோதனை

0 4634
என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரில் SDPI அலுவலகங்கள் உள்பட 43 இடங்களில் சோதனை

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று SDPI  அலுவலகங்கள் உள்பட பெங்களூரில் 43 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த கலவரத்தில் 3 ஆயிரம் பேர் வன்முறையில் ஈடுபட்டு எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் வீட்டுக்கும் இரண்டு காவல் நிலையங்களுக்கும் தீ வைத்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவேறு பிரிவுகளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகள்  தொடர்பான வழக்கு விசாரணையில் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் அலுவலகங்களில் சோதனையிட்ட அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த வாள்கள், இரும்புத் தடிகள், கத்திகள் போன்ற வனமுறைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments