யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அஇதவிமஇ கட்சி தொடர்ந்து நடத்தப்படும்-எஸ்.ஏ. சந்திரசேகர்
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அஇதவிமஇ கட்சி நடத்தப்படும் என்று நடிகர் விஜய்யின் தந்தையும், மூத்த திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் தனியார் அமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தாம் எப்போதும் இருந்ததில்லை என்றும், எதிர்நீச்சல் போடுவதையே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியை ஆரம்பிக்கையில் ஆரம்பத்தில் மிரட்டல் வருமென்பது தனக்கு தெரியும் என்றார். கட்சியை விட்டு ஒவ்வொருவராக விலகுவது குறித்த கேள்விக்கு 2 நாள்களில் அதுகுறித்து பதில் அளிப்பதாக கூறினார்.
Comments