நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணமடைந்த விவகாரம் : விருதாச்சலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு
நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற மனைவியின் கோரிக்கை குறித்து விருதாச்சலம் மாஜிஸ்திரேட் முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகை பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வமுருகன், விருதாச்சலம் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்தபோது மரணமடைந்தார்.
நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக்கோரியும், கணவர் உடலை ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறு பிரேதபரிசோதனை கோரியும் செல்வமுருகனின் மனைவி பிரேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மறுபிரேதப் பரிசோதனை குறித்த பிரேமாவின் கோரிக்கையை விருதாச்சலம் மாஜிஸ்திரேட் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிபதிரவீந்திரன், வழக்கை முடித்து வைத்தார்.
Comments