காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 102 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன

0 1184
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 102 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன

தொடர் மழையால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 102 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 102 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.

191 ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளது. 250 ஏரிகள் 50 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. 174 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது.

189 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கே நீர் நிரம்பியுள்ளது. 3 ஏரிகள் நீர்வரத்து இல்லாமல் உள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments