நடிகை கங்கனா ரணாவத் அவரது சகோதரி ரங்கோலி சான்டலுக்கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன்

0 1542
நடிகை கங்கனா ரணாவத் அவரது சகோதரி ரங்கோலி சான்டலுக்கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன்

மதரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில்  பதிவிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நடிகை கங்கனா ரணாவத், சகோதரி ரங்கோலி சான்டலுக்கு மும்பை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக 2 பேர் மீதும் பாந்த்ரா காவல்நிலையத்தில் அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வரும் 23, 24ம் தேதிகளில் நேரில் ஆஜராகும்படி கங்கனாவுக்கும், ரங்கோலி சான்டலுக்கும் பாந்த்ரா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஏற்கனவே 1முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments