தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சரின், முன்னாள் முதன்மைச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 1137
தங்கக் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சரின், முன்னாள் முதன்மைச் செயலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள முதலமைச்சரின், முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில், தொடர்பு இருப்பதாக கடந்த மாதம் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.  ஜாமின் கேட்டு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சிவசங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என தெரிவித்த, அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிவசங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments