கஜகஸ்தான்: நீர் நிலைகளில் இளைப்பாற வந்த ஃபிளாமிங்கோ பறவைகள்..!
கஜகஸ்தான் வடக்குப் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பல நூறு ஃபிளாமிங்கோ பறவைகள் திரண்டிருப்பதால் அங்குள்ள ஏரிகள் இளம் சிவப்பு நிறமாக காட்சியளிக்கின்றன.
நாடு விட்டு நாடு என நீண்ட தூரம் பயணிக்கும் இந்த பறவைகள் இப்பகுதியின் நீர் நிலையைக் கண்டு இளைப்பாறுதல் செய்வது வழக்கம். இந்த பறவைகளின் பேரழகை ஒரு உள்ளூர் இயற்கை ஆர்வலர் படம் பிடித்துள்ளார்.
ஈரான் அல்லது தென் கஜகஸ்தானுக்கு இந்தப் பறவைகள் சில நாட்களில் பறந்து சென்றுவிடும் என்று கஜகஸ்தானின் இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments