பாகிஸ்தான் ராணுவத்தில் சிலர் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது ஊரறிந்த ரகசியம் - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா
பாகிஸ்தான் ராணுவத்தில் சிலருக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அபோட்டாபாத் பகுதியில் பதுங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க வீரர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறித்து தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒபாமா, பின்லேடன் விஷயத்தில் பாகிஸ்தானுக்குத் தெரியாமல்தான் செயல்பட வேண்டியதாக குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் சிலர் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது ஊரறிந்த ரகசியம் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாதிகளை இந்தியா மற்றும் ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடனைக் கொல்ல திட்டமிட்ட போது அதனை எதிர்த்தவர்களில் அப்போது துணை அதிபராக இருந்த ஜோ பைடனும் ஒருவர் என்றும் ஒபாமா அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Comments