ஒடிஷாவில் அரசு சலுகைகளை அபகரிப்பதாக தந்தை மீது சிறுமி புகார்

0 2351
ஒடிஷாவில் அரசு சலுகைகளை அபகரிப்பதாக தந்தை மீது சிறுமி புகார்

ஒடிஷாவில் அரசு சலுகைகளை அபகரித்து கொள்வதாக 6ம் வகுப்பு மாணவி தனது  தந்தை மீது, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கேந்த்ரபடா மாவட்டத்தை சேர்ந்த மாணவி அளித்த புகாரில், ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் உதவித் தொகை மற்றும் அரிசியை, தனது தந்தை அபகரித்து கொள்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

10 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று சிறுமி அளித்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உதவித்தொகையை இனி நேரடியாக மாணவியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்த வழிவகை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments