திடீரென மயக்கமடைந்த பயணி... கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
ரியாத்தில் இருந்து டெல்லி வந்த கோ-ஏர் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால், விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு விமான நிலைய மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், மயக்கமடைந்த பயணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், விமானம் கராச்சியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது.
Comments