அதிபர்கள் மாறினாலும் இந்திய அமெரிக்க நட்பு மாறாது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை
இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியமானவர் அல்ல என்றும் இதற்கு முன்பும் பாரக் ஒபாமா அரசில் துணை அதிபராக இருந்த போது அவர் இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தார் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், டொனால்ட் டிரம்ப் விட்ட இடத்திலிருந்து இந்திய- அமெரிக்க நட்புறவை ஜோ பைடன் தொடர்ந்து மேலே எடுத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கிளின்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப் என கடந்த 20 ஆண்டுகளில் நான்கு அதிபர்களுடன் இந்தியா கொண்ட உறவு வளர்ச்சியை அடைந்திருப்பதாக கூறிய அவர், நான்கு வெவ்வேறு கொள்கை கொண்ட அதிபர்களும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Comments