நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் இலவச ஸ்மார்ட்போன்...ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

0 1881
நக்சலைட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் இலவச ஸ்மார்ட்போன்...ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

ஒடிஷாவில் மாவோயிட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியில் அனைத்து வீடுகளுக்கும், இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என, முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

மல்கான்கிரி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை, முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அப்பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் 4ஜி செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார்.

வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் நவீன்பட்நாயக் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments