இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதைத் தடுக்க, அந்நாட்டு அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள கோரிக்கை
இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதைத் தடுக்க, அந்நாட்டு அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசு வழிவகுக்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அரசின் தற்சார்பு பொருளாதார கொள்கையால், வேளாண் விளை பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக, மஞ்சள் வியாபாரிகள், கூறியுள்ளனர்.
இதனால், தமிழ்நாட்டிலிருந்து, நடைபெற்று வந்த மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, 50 கோடி ரூபாய் வரையில், இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில், மஞ்சள் கிலோ 80 ரூபாய் வரையில் மொத்த விற்பனை செய்யப்படும் நிலையில், இலங்கையில், 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்படுவதாக, ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் கூறியுள்ளனர்.
Comments