வாராக்கடன் அதிகரிப்பால் நிதி நெருக்கடியில் லஷ்மி விலாஸ் வங்கி...பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது ரிசர்வ் வங்கி
லஷ்மி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதால், வாடிக்கையாளர் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்மி விலாஸ் வங்கியின் வாராக்கடன் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பையே சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ள வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரையே எடுக்க முடியும் என்றும், வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும், இந்த நடவடிக்கையால் பீதி அடைய தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Comments