இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி : மைக்ரோ சாப்ட் நிறுவனம் தகவல்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சி நடைபெறுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரஷியா, வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களை ஹேக் செய்து கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் உள்ள நிறுவனங்களின் லாக்-இன் கடவு சொல்களை திருட ரஷியாவின் ஸ்ரான்டியம், வடகொரியாவின் சின்ங் மற்றும் செரிம் ஆகிய மூன்று ஹேக்கிங் நிறுவனங்கள் முயற்சிப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
Comments