பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி..? நோயற்ற குழந்தைகளே... தேசத்தின் அஸ்திவாரம்...

0 2398
நோயற்ற குழந்தைகளே... தேசத்தின் அஸ்திவாரம்...

ச்சிளம் குழந்தைகள் வாரம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பதை தடுக்கவும், பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவரிக்கிறது இந்தி செய்தி தொகுப்பு.

பச்சிளம் குழந்தைகள் வாரமானது ஆண்டு தோறும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. பிறந்த நாள் முதல் 28 நாட்கள் வரை இருக்கும் குழந்தைகளை பச்சிளம் குழந்தைகள் என அழைப்பர்.

பிறக்கும் குழந்தை ஒரு கிலோ எடைக்கு குறைவாகவும், உடல் வெப்பம் 34.5 டிகிரி செல்சியஸ் குறைவாகவும், மஞ்சள் காமாலை, இரத்தத்தில் அணுக்களின் அளவு இயல்பை விட குறைந்திருத்தல், குறைமாதத்தில் பிறப்பது போன்ற காரணங்களால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடுகின்றன.

இதனை தவிர்க்க பேரு காலத்தில் பெண்கள், துரித உணவு, மைதா மாவினால் செய்யப்பட்ட பரோட்டா போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உயரம் 153 சென்டி மீட்டருக்கு குறைவாகவும், உடல் பருமனுடன் இருக்கும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் புரோட்டீன் சத்துள்ள உணவுகள், கீரை வகைகளை தவறாமல் உட்கொண்டு, முறையான உடல் பயிற்சி, யோகா செய்து வந்தால், குறை பிரசவத்தை தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது தவிர பிறப்புக்கு பின் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்புகளை தவிர்க்க சர்க்கரை தண்ணீர், தேன், கழுதை பால், புட்டி பால் ஆகியவற்றை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் எழிலரசி. மூச்சு திணறல், நரம்பு மண்டலம் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, தடுப்பு ஊசி, தாய்ப்பால் ஆகியவற்றை பச்சிளம் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து பராமரித்தால், ஆரோக்கியமான குழந்தைகளை தேசத்திற்கு கொடுக்க முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறார்கள் அரசு மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments