பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினர் மோதல்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
பிரான்சில் முகம்மது நபிகளின் கேலி சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டித்து அந்நாட்டுடனான ராஜ்ஜீய உறவுகளை துண்டிக்கக் கோரி தெஹ்ரிக்-இ-லபாய்க் பாகிஸ்தான் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அக்கட்சியினர் ஏராளமானோர் இஸ்லாமாபாத்துக்குள் நுழையும் திட்டத்துடன் பேரணியாக வந்தபோது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திய போது மோதல் மூண்டது.
Comments