அதிகார மாற்றத்திற்கு டிரம்பும் அவரது நிர்வாகமும் தடையாக உள்ளனர் - மிஷைல் ஒபாமா
அதிகார மாற்றம் சுமுகமாக நடப்பதை டிரம்பும் அவரது நிர்வாகமும் தடுப்பதாக, அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிஷைல் ஒபாமா, கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை அதிபர்கள் நடந்து கொண்டது போல், தேர்தல் முடிவுகளை மதித்து, அதிகார மாற்றம் நடக்க நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
2016 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்த ஏமாற்றத்தில் இருந்த வேளையிலும், அதிபராக இருந்த ஒபாமாவும், தாமும், வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக தேர்வான டிரம்பை எப்படி வரவேற்றோம் என மிஷைல் குறிப்பிட்டுள்ளார்.
அது தமது மனதிற்கு வேதனை அளித்தாலும், மக்களின் தீர்ப்பை மதித்து டிரம்பை வரவேற்றதாக அவர் தெரிவித்துள்ளார். வைரலான மிஷைலின் பதிவை சில மணி நேரங்களில் 27 லட்சம் லைக் செய்துள்ளனர்.
Comments