பட்டினப்பாக்கம் : அடையாறு ஆறு கடலோடு கலக்கும் பகுதியில் ததும்பும் நுரைப்படலம், நுரை காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அச்சம்
சென்னை பட்டினப்பாக்கத்தில், அடையாறு ஆறு கடலோடு கலக்கும் பகுதியில் நுரை பொங்கி காணப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி அருகே உருவாகும், அடையாறு ஆறு, பட்டினப்பாக்கம் பகுதியில், வங்க கடலில் கலக்கிறது. இதில், விதிகளை மீறி, ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும், கழிவுநீர் சுத்திக்கப்படாமல் கலக்க விடப்படுவதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு, அடையாறு ஆற்றில் கலக்கும் சோப்பு எண்ணெய் கழிவுகளினால் உருவாகும் பாஸ்பேட்டுகள், கடலின் வண்டல் படிவுகள் மீது, பாசி போல் படிகின்றன.
மழைக்காலங்களில், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, வேதிச்சேர்க்கையில், சர்பேக்டன்ஸ்-களாக மாறி, நுரைத்துப் பொங்குகிறது.
இதனால், கடுமையான நுர்நாற்றம் வீசுவதோடு, பட்டினம்பாக்கம் கடற்கரையோரப் பகுதியில், நுரைப்படலம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், கடற்காற்றினால், நுரைகள் பறந்து செல்வதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Comments