நகை வாங்குவது போல் நடித்து கவரிங் செயினை மாற்றி வைத்து தங்க செயினை திருடிய கேரள தம்பதி

0 10503

கோவையில் நகை கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து கவரிங் செயினை மாற்றி வைத்துவிட்டு தங்க செயினை திருடி சென்ற கேரள தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்த கேரளாவை சேர்ந்த சுதீஷ் மற்றும் ஷானியிடம் கடை ஊழியர்கள் செயினை காட்டியுள்ளனர்.

அப்போது அவர்கள், ஊழியர்கள் காண்பித்த செயினில் 4 சவரன் செயினை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்துவிட்டு நாளை மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

செயின் திருடப்பட்டதை அறிந்த கடை மேலாளர் போலீசில் புகார் அளித்தை அடுத்து கேரள தம்பதி கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட செயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments