கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக மாறிய சந்தைகளை மூட டெல்லி முதலமைச்சர் உத்தரவு
டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், ஹாட்ஸ்பாட்டுகளாக மாறியுள்ள சில சந்தைகளை மூட உள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதாக அவர் கூறினார். அதே போன்று திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்பட்டு, அது 50 ஆக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் தினசரி தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ தாண்டியது. வரும் நாட்களில் அது 15 ஆயிரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுவதால் முன்னெச்சரிக்கை தீவிரமாகியுள்ளது.
When Corona situation improved in Delhi a few weeks ago, number of people attending a wedding was increased to 200, according to Center's guidelines. Now it's being withdrawn & only 50 people will be allowed. The decision has been sent for LG's approval: Delhi CM Arvind Kejriwal https://t.co/ZH3GgxRLV5 pic.twitter.com/yY35vHYDvQ
— ANI (@ANI) November 17, 2020
Comments