வாசன் ஐ கேர் குழுமத் தலைவர் மரணம் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது - சென்னை காவல்துறை விளக்கம்

0 6723
வாசன் ஐ கேர் குழுமத் தலைவர் மரணம் குறித்து வதந்தி பரப்பப்படுகிறது - சென்னை காவல்துறை விளக்கம்

வாசன் ஐ கேர் (Vasan Eye Care) குழும தலைவர் அருண் மரணம் குறித்து  வதந்தி பரப்பப்படுவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் தகவல் பரவுகிறது.  பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், அருண் மரணம் குறித்து விசாரணை தேவை என குடும்பத்தினர் எதிர்பார்ப்பதாக வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் சென்னை காவல்துறை தரப்பில்,  சந்தேக மரணம் என்றோ, தற்கொலை என்றோ குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், நேற்றே உடற் கூறாய்வு முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு முடிந்துவிட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments