கரீபியன் நாடுகளை அச்சுறுத்தும் அயோட்டா புயல் : 80,000 பேர் புயலால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை
அயோட்டா புயல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து கரீபியன் நாடுகளில் ஒன்றான நிகரகுவாவில் 80 ஆயிரம் மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
5 வது வகைப் புயலாக உருமாறியுள்ள அயோட்டா புயல், கொலம்பிய தீவுகளான சான் ஆண்ட்ரஸ் மற்றும் ப்ராவிடென்சியா ஆகியவற்றைக் கடந்துள்ளது.
தற்போது நிகராகுவாவின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில், நிகரகுவாவில் சுமார் 80 ஆயிரம் பேர் அயோட்டா புயலால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளதால், அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
Comments