2ம் உலகப் போரின் போது வெடிக்காத குண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைப்பு
இரண்டாம் உலகப் போரின் போது வெடிக்காமல் கிடந்த வெடிகுண்டு தற்போது கடலுக்குள் வெடிக்க வைக்கப்பட்டது.
குவர்ன்சே கடல் பகுதியில் வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு அதனைக் இங்கிலாந்து கப்பல் படையினர் கைப்பற்றினர். சுமார் 3 அடி நீளமுள்ள அந்தக் குண்டு, 2ம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்டதும், நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்க வல்லது என்பதையும் கண்டுபிடித்தனர். தற்போதும் அது வெடிக்கும் திறனுடன் இருப்பதைக் கண்ட அவர்கள் பழமையான குண்டை கடலுக்குள் வைத்து வெடிக்கச் செய்தனர்.
Comments