அதிகளவில் வேட்டையாடப்படுவதால் அழியும் நிலையில் அரியவகை வெள்ளை மூஸ் மான்கள்
கனடாவில் அரியவகை வெள்ளை மூஸ் மான்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் அதன் இனம் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மான் இனத்திலேயே மிகப் பெரியதான மூஸ் மான்களில் வெள்ளை நிறத்தில் இருப்பது அரியதாகும். இவை கனடாவின் அண்டாரியோவில் உள்ள டிம்மின்ஸ் பகுதியில் காணப்படுகின்றன.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள உள்ளுர் மக்கள் மற்றும் வேட்டையாடிகளால் வெள்ளை மூஸ்கள் அதிகம் கொல்லப்படுவது தெரியவந்துள்ளது.
இதனால் இதன் இனமே அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூஸ்களை வேட்டையாடுவதைத் தடுக்க கனடா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Comments