டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய 10 சிறப்பு குழுக்கள்- மத்திய அரசு உத்தரவு
டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய அரசு சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று, கொரோனா சிகிச்சை மற்றும் பிசிஆர் பரிசோதனை முறை போன்றவை தொடர்பாக ஆய்வு செய்ய, 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், 2 நாட்களில் இந்த குழுக்கள் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா, என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Multi-disciplinary teams are constituted to visit all Private hospitals in Delhi to check status of compliance of various directions issued by Union Health Ministry for testing & treating COVID patients & of Govt of Delhi to contain the spread of COVID19: Ministry of Home Affairs pic.twitter.com/bh0LZA3nAz
— ANI (@ANI) November 16, 2020
Comments