இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் 2வது கட்ட போர் பயிற்சி இன்று தொடக்கம்
இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டாக மேற்கொள்ளும் 2வது கட்ட போர் பயிற்சி இன்று தொடங்குகிறது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி கோவா கடற்பகுதியில் நடைபெறுகிறது.
விமானம் தாங்கிய அதிநவீன போர்க் கப்பல்கள் பங்கேற்கும் பயிற்சியில், போர் சமயங்களில் இணைந்து செயல்படுவது, ஆகாய பாதுகாப்பு போன்ற நவீன பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சீனாவிற்கு எதிராக ஒற்றைக் கருத்துக்களை கொண்ட, க்வாட் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
Comments