8 மாதங்களுக்குப் பின் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகவல்
நாட்டின் மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கமானது 8 மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபரில் ஏற்றம் கண்டுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தயாரிப்பு துறை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, அக்டோபரில் பணவீக்கம் 1.48 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனை விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம், கொரோனாவுக்கு முன்னதாக நடப்பாண்டு பிப்ரவரியில் 2.26 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
8 மாதங்களுக்குப் பின் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகவல் || #India | #Inflation | #FederalMinistryofCommerceandIndustry https://t.co/iRuIvSKzIt
— Polimer News (@polimernews) November 17, 2020
Comments