”பாஜக வற்புறுத்தலால் முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டேன்” நிதிஷ்குமார் பேசியதை ட்விட்டரில் கிண்டலடிக்கும் தேஜஸ்வி கட்சி
பீகார் முதலமைச்சராக பதவியேற்க தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், பாஜக தலைவர்களின் வற்புறுத்தலால் பதவியேற்க ஒப்புக் கொண்டதாக நிதிஷ்குமார் கூறியதை சுட்டிக்காட்டி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக தலைவர்கள் பலர் அவரது காலைப்பிடித்து கெஞ்சி, அழுதது போலவும் அதனால் தான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்க ஒப்புக் கொண்டது போன்றும் கேலி செய்யப்பட்டுள்ளது.
तीसरे दर्जे की पार्टी होने और थकने के कारण मैं मुख्यमंत्री नहीं बनना चाहता था लेकिन BJP के कई वरिष्ठ नेताओं ने मेरे पैर पकड़ लिए,रोने लगे,गिड़गिड़ाने लगे। मैं ठहरा कोमल हृदय का कुर्सीवादी अंतर्यामी भिक्षुक, उन लोगों के आग्रह ने मेरे हृदय को पिघला दिया। मैं उन्हें नाराज कैसे करता?
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 16, 2020
Comments