நீதிபதி என்.வி.ரமணா மீது ஜெகன்மோகன் குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரம்; வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை
உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா குறித்து அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு லலித் விலகியுள்ளார்.
தெலுங்கானா சிறப்பு நீதிமன்றத்தில், தனக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கில் நீதிபதி ரமணா தலையிட முயற்சிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார்.
நீதிபதிகளுக்கு எதிராக இதுபோல செய்தியாளர் சந்திப்பு நடத்த தடை கோரியும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் முதன் முறையாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு.லலித் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தாம் வழக்கறிஞராக இருந்தபோது அந்த தரப்புக்கு ஆதரவாக வாதாடியிருப்பதால், வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற அவர் பரிந்துரை செய்தார்.
Comments