தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு...
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறைத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அளித்துள்ள வீடியோ பேட்டியில், குமரிக்கடல் முதல் வட தமிழகக் கடற்கரை வரை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகவும், அதன் காரணமாகப் பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகத் ஸ்ரீபெரும்புதூரில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments