பெரு நாட்டின் இடைக்கால அதிபர் மனுவேல் மரினோ தனது பதவியை ராஜினாமா செய்தார்
தென் அமெரிக்க நாடான பெருவின் இடைக்கால அதிபராக இருந்த மனுவேல் மரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அவர், அமைதி மற்றும் ஒற்றுமையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பெரு நாட்டின் அதிபர் மார்டின் விஸ்காரா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை வீசி போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இதில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Comments