இந்தியாவில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளில், 75 கோடியை தாண்டியது இணைய இணைப்புகளின் எண்ணிக்கை..!
இந்தியாவில் இணையம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 75 கோடியை தாண்டியுள்ளது.
இந்தியாவில் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு இணையம் வந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு கணக்கின்படி 34 கோடி இணைய இணைப்புகள் இருந்தன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.
2015ஆம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இணைய இணைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களின் பங்கு, 35 சதவீதம்.
இணைய இணைப்புகளின் எண்ணிக்கை 76 கோடியாக உயர்ந்தாலும், இணையத்தை அணுகுபவர்களின் எண்ணிக்கை 47.5 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments