பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் இன்று பதவியேற்பு: பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர்கள், 18 அமைச்சர்கள் பதவி என தகவல்

0 2372
பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் பதவியேற்க உள்ள நிலையில், பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர்கள் மற்றும் 18 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் முதலமைச்சராக நிதீஷ்குமார் பதவியேற்க உள்ள நிலையில், பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர்கள் மற்றும் 18 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று மாலை 4.30 மணிக்கு, புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பீகார் ஆளுநர் பகு சவுகான், முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்க உள்ளார்.

பாஜக-விற்கு 2 துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், தர்கிஷோர் பிரசாத், ரேணு ஆகிய இருவருக்கும் அப்பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் 243 எம்எல்ஏக்களை கொண்ட பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 36 பேர் இடம்பெற முடியும்.

இந்நிலையில், 7 எம்எல்ஏ இடங்களுக்கு இரு அமைச்சர் பதவி என்ற ஃபார்முலாவின் அடிப்படையில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகளும், பாஜகவிற்கு 18 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தலா 4 இடங்களை வென்ற இரு கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முறை பீகார் அமைச்சரவையில் புதிய, இளம் முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments