பிரான்சில் கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டம்
பிரான்சு நாட்டில் கொரோனா காரணமாக கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஏராளமான கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Versailles பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முக கவசம் அணிந்தபடி கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த போதும் தடையை மீறி நடைபெற்றது. அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பிரான்சில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு மக்கள் கூடும் இடங்கள், கிறித்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கத்தோலிக்கர்கள் ஆர்ப்பாட்டம் #France | #Protest https://t.co/Cw11ow3Hur
— Polimer News (@polimernews) November 16, 2020
Comments