தலை துண்டித்துப் படுகொலை.. சர்ச் வாசலில் தலை.! பதைபதைக்கும் காட்சி

0 9453

மதுரையில், மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், இளைஞர் ஒருவர், தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட தலை தேவாலய வாசலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் செல்போன் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மதுரையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழவெளி வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல், ஒட, ஓட விரட்டி, அரிவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தில், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகானந்தம் என்ற நபரின் தலையைத் துண்டித்த கும்பல், செயிண்ட் மேரீஸ் தேவாலய வாசலில் வைத்துச் சென்றது.

இந்த சம்பவத்தில், அந்த நபரின் தலை துண்டிக்கப்படும், பதைபதைக்கும் காட்சிகள், காரிலிருந்து ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட நிலையில், வெளியாகியுள்ளது.

அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட கீழ்மதுரை முனுசாமி என்ற இளைஞர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மதுரை செயின்ட் மேரீஸ் தேவாலய வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தலை துண்டித்துக் கொல்லப்பட்ட மதுரை ஒத்தக்கடை முருகானந்தத்தின் மீது, பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாக, காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, பயங்கர ஆயுதங்களுடன் பழங்காநத்தம் R.T.O அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments