பார்முலா 1 கார் பந்தயத்தில் 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஹாமில்டன் சாதனை

0 1399
பார்முலா 1 கார் பந்தயத்தில் 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஹாமில்டன் சாதனை

பார்முலா ஒன் கார்பந்தயங்களில் 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாதனை படைத்துள்ளார்.

இஸ்தான்புல் நகருக்கு அருகே நடைபெற்ற துருக்கி கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.

309 கிலோ மீட்டர் இலக்கை ஒரு மணி 42 நிமிடம் 19 வினாடிகளில் கடந்து மெர்சிடஸ் அணியின் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு சீசனில் அதிகப் புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ள ஹாமில்டன், 7வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments